பார்ச்வ என்றால் ஒரு பக்கம் என்று பொருள்.இது நீட்டிக்கப்பட்ட,பக்க கோன வடிவான ஆசனம்.
1.தடாசனாவில் நிற்கவும் மூச்சை உள்ளே இழுத்து ஒரு குதி குதித்து காள்களை
4 அடி இடைவெலளியில் பரப்பவும்.பக்கவாட்டில் கைகளை
தூக்கவும்.உள்ளங்கை கீழ்ப்பக்கம் நோக்கி இருக்க வேண்டும்.
2.மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வலது பாதத்தை 90 டிகிரியில் வலது பக்கம்
திருப்பி,இடது பாதத்தை வலது பக்கம் திருப்பவும்.இடது பாதத்தை நன்றாக
நீட்ட வேண்டும்.வலது முழங்காலை வளைத்து தொடையும் காலும்
சென்கோணமகவும்,வலது தொடை தரைக்கு இணையாக இருக்கும் படியும்
வைத்துக்கொள்ள வேண்டும்.இடது கையின் கட்டைவிரலைப் பார்க்க
வேண்டும்.
3.வலது உள்ளங்கையை வலது பாதத்துக்கு அருகில் தரையில் வைக்க
வேண்டும்.வலது கட்கம்,முழங்காலுக்கு வலது பக்கத்தில் இணைய
வேண்டும்,இடது கையை இடது காதுக்கு மேலாக நீட்ட வேண்டும்.தலையை
கூரையை நோக்கி மேலே தூக்க வேண்டும்.
4.இடுப்பை நன்றாக நீட்ட வேண்டும்.
5.இந்த நிலையில் அரை நிமிடம் இருக்க வேண்டும்.
6.இதே போல் இடது பக்கமும் செய்ய வேண்டும்.
7.இந்த நிலையில் ஒரு நிமிடம் மூச்சு விட வேண்டும்.பின்பு வலது
உள்ளங்கையைத் தரையில் இருந்து எடுக்கவும்,மூச்சை உள்ளிழுத்து 2வது
நிலைக்கு வரவேண்டும்.
8.வலது பாதத்தை 90 டிகிரி திருப்பி இடது பக்கம் கொண்டு செல்லவும்.இரண்டு
முழங்கால்களையும் நீட்டி,முதலில் சொல்லப்பட்ட 6 விதிகளை மறுபடி
செய்யவும்.மூச்சை உள்ளே இழுத்து 2 வது நிலைகு வரவேண்டும்.
9.மூச்சை வெளியே இழுத்து தடாசனா வர வேண்டும்.
பலன்கள்:
இந்த ஆசனம் கால்களைப் பலப்படுத்துகிறது,இடுப்பு சதை குறைந்து நல்ல
உருவம் கிடைக்கிறது.இடுப்பு மெலிந்து கெட்டியாவதால் உடல் அழகு
பெருகிறது.