பரிவ்ரத திரிகோணாசனா (யோகா)

பரிவ்ரத என்றால் திரும்புதல்.இது சுழலும் முக்கோண் ஆசனம்.உத்தித திரிகோணாசனத்துக்கு எதிர்மறையானது.
தடாசனாவில் நிற்கவும்.
மூச்சை உள்வாங்கி,குதித்து கால்களை 3 1/2 அடி இடைவெளியில்பரப்பவும்.உள்ளங்கை தரையை நோக்கும்படியாகக் கைகளைப் பக்கவாட்டில் நீட்டவும்.வலது பாதத்தை பக்கவாட்டில் 90 டிகிரி திருப்பவும்.இடது பாதத்தை 60 டிகிரி வலது பக்கம் திருப்பவும்.
மூச்சை வெளியிட்டுக்கொண்டே,உடலை வலது பக்கமாகத் திருப்ப வேண்டும்.இடது உள்ளங்கை வலது காலுக்கு அருகாமையில் தரையில் தொட முயற்சிக்க வேண்டும்.
பலன்கள்:
இந்த ஆசனம் தொடை,கால் மற்றும் இடுப்புச் சதைகளைபலபடுத்துகிறது.இதை தொடர்ந்து செய்து வந்தால் தண்டு வடமும்பின்பகுதியும் நன்றாக வேலை செய்யும்.இந்த பகுதிகலுக்கான ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.மார்பு நன்ரறாக விரிவடையும்.பின்பக்கத்து வலிகள் நீங்கும்.வயிற்றுப்பகுதி உறுப்புகலளும்,இடுப்பு பகுதியும் பலப்படும்.
    subscribe

    Subscribe

    Monitor continues to update the latest from This blog directly in your email!

    oketrik

    0 comments to பரிவ்ரத திரிகோணாசனா (யோகா) :

    Post a Comment