வீரபத்ராசனா-2

  • தடாசனாவில் நிற்கவும்.
  • உள் மூச்சு வாங்கி கால்களை 4 1/2 அடிக்குப் பரப்பவும்.கைகளைத் தோளுக்கு இணையாகப் பக்கவாட்டில் உயர்த்த வேண்டும்.உள்ளங்கை கீழே பார்க்க வேண்டும்.
  • மூச்சை வெளிவிட்டுக்கொண்டே வலது முழங்காலை வளைத்து தொடை தரைக்கு இணையாகும் படி கொண்டு வரவும்.முழங்கால் குதிகாலுக்கு இணையாகா இருக்க வேண்டும்.
  • எதிர்ப்புறத்திலிருந்து இரண்டு பேர் கையை இழுப்பது போல் பக்கவாட்டில் கைகளை நீட்ட வேண்டும்.
  • முகத்தை வலப்புறம் திருப்பி வலது கையைப் பார்க்க வேண்டும்.இடது காலை நன்றாக நீட்ட வேண்டும்.
  • இந்த நிலையில் அரை நிமிடம் நிற்க இருக்கவும்.மூச்சை இழுத்து 2ம் நிலைக்கு வரவும்.
  • இதே போல் இடது பக்கமும் செய்ய வேண்டும்.
  • இரண்டாம் நிலைக்கு வந்து தடாசனா வரவும்.
பலன்கல்;
கால் தசைகள் பலமடைந்து நல்ல உருவம் பெறுகின்றன.சுளுக்கு இருந்தால் விலகி விடும்.வயிற்றுப் பகுதி உறுப்புகள் நன்றாக வேலை செய்து சீரண சக்தி அதிகரிக்கும்.
subscribe

Subscribe

Monitor continues to update the latest from This blog directly in your email!

oketrik

0 comments to வீரபத்ராசனா-2 :

Post a Comment