- தடாசனாவில் நிற்கவும்.
- வுள் மூச்சை வாங்கி கால்களை 4 1/2 அடிக்குப் பரப்பவும்.கைகளைத் தோளுக்கு இணையாகப் பக்கவாட்டில் உயர்த்த வேண்டும்.உள்ளங்கை கீழே பார்க்க வேண்சடும்.
- மூச்சை வெளி விட்டுக்கொண்டே வலது முழங்காலை வளைத்து தொடை தரைக்கு இணையாகும் படி கொண்டு வரவும்.முழங்கால் குதிகாலுக்கு இணையாக இருக்க வேண்டும்.
- எதிர்ப்புறத்திலிருந்து இரண்டு பேர் கையை இழுப்பது போல் பக்கவாட்டில் கைகலை நீட்ட வேண்டும்.
- முகத்தை வலப்புறம் திருப்பி வலது கையைப் பார்க்க வேண்டும்.இடது காளை நன்றாக நீட்ட வேண்டும்.
- இந்த நிலையில் அரை நிமிடம் இருக்கவும்.மூச்சை இழுத்து 2ம் நிலைக்கு வரவும்.
- இதே போல் இடது பக்கமும் செய்ய வேண்டும்.
- இரண்டாம் நிலைக்கு வந்து தடாசனா வரவும்.
கால் தசைகல் பலமடைகிறது மற்றும் உருவம் பெறுகின்றன.சுளுக்கு இருந்தால் விலகி விடும்.வயிற்றுப் பகுதி உறுப்புகல் நன்றா வேலை செய்து ஜிரண சக்தி அதிகரிக்கும்.