பரிவ்ரத பார்ச்வ கோணாசனா (யோகா பயிற்சி)

  • தடாசனாவில் நிற்கவும்.
  • மூச்சை இழுத்து,குதித்து கால்கலை 3 1/2 அடி இடை வெளியில் பரப்பவும்.தோலுக்கு இனையாக இருக்கும் படி கைகளை பக்கவாட்டில் நீட்ட வேண்டும்.
  • மூச்சை வெளியே விட்டுக்கொண்டே உடலை வலது பக்கம் திருப்பவும்.இடது உள்ளங்கை வலது காலுக்கு அருகாமையில் தரையில் தொட முயற்சிக்க வேண்டும்.
  • வலது கையை மேலே தூக்கி தலைக்கு மேலாக நீட்ட வேண்டும்.வலது கட்டை விரலைப் பார்க்க வேண்டும்.
  • முழங்காலை நீட்டிக்க வேண்டும்.வலது பாத விரல்கல்தரயோடு ஒட்டி இருக்க வேண்டும்.
  • தோளை விறைப்பாக்கவும்.இந்த நிலையில் அரை நிமிடம் நிற்க வேண்டும்.சாதாரணமாக மூச்சு விட வேண்டும்.
  • மூச்சை உள்ளிழுத்து கையைத் தரையிலிருந்து தூக்கி உடலைத் திருப்பி முதல் நிலைக்கு வரவும்.
  • மூச்சை வெளியே விட்டு இடது பக்கத்திலும் மேலே சொன்னது போல சொனனது போல செய்யவும்.
  • பின்னர்,இரண்டு பக்கத்திலும் சம காலமாக நிற்க வேண்டும்.
  • அதன் பிறகு மூச்சை உள்ளே இழுத்து 1ம் நிலைக்கு வரவும்.
  • மூச்சை வெளியே விட்டு தடாசனா வர வேண்டும்.
பலன்கள்:பார்ச்வ கோணாசனத்தை விட,இதில் பலன் கிடைக்கிறது.இந்த ஆசனத்தால் வயிற்றுப்பகுதியிலுள்ள உறுப்புக்கள் நன்றாக வேலை செய்கின்றன.அதனால் கழிவுப் பொருள் இலகுவாக வெளியேற்றப்படுகிறது.
subscribe

Subscribe

Monitor continues to update the latest from This blog directly in your email!

oketrik

0 comments to பரிவ்ரத பார்ச்வ கோணாசனா (யோகா பயிற்சி) :

Post a Comment